பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார்.

சென்னை,

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

இது தொடர்பாக கூறிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும் : இவை அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், விளையாட்டுத்துறைக்கும் மாபெரும் இழப்பு" என்று உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story