'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Feb 2024 5:50 AM GMT (Updated: 16 Feb 2024 6:09 AM GMT)

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை,

மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story