பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி), மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றடைந்தார். பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சரை, கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டிகே சிவகுமார் வரவேற்றார்.


Related Tags :
Next Story