அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடி வடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்த உள்ளார்.
குறிப்பாக வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நலையில் அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.