நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாகை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அந்த வகையில், 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருக்குவளைக்கு சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசித்து வருகிறார்.


Related Tags :
Next Story