முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்:1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்:1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

காலை உணவு திட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவிற்குட்பட்ட காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பார்த்திபன் எம்.பி முன்னிலை வகித்தார். கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக அமைகிறது. இந்த திட்டத்தின் படி மாவட்டத்தில் 1,418 பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஆயிரத்து 318 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.

தடையாக இருக்காது

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். எனவே, எவ்வழியில் கல்வி பயின்று வருகிறோம் என்பது ஒரு தடையாக இருக்காது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்திரயான் 3 திட்ட இயக்குனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு, புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் தணிகாச்சலம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலூர் தாசில்தார் புருசோத்தமன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி ராஜா, காமலாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிக்கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story