மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல்
மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல் அனுப்பும் பணி தொடங்கியது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 25,713 பேருக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல்கள் நேற்று நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வந்தது.
இதனை, மகளிர் உரிமைத் தொகை பெற்ற அனைவருக்கும் அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. வாழ்த்து மடல்களை கவரில் போடும் பணியை இந்த பணியை நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில், துணை தாசில்தார் நடராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story