முதல்-அமைச்சர் வருகை: காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி காஞ்சிபுரத்தில் நாளை (15.09.2023) அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story