பெருந்துறைக்கு முதல்-அமைச்சர் வருகை: ரோட்டில் இருந்த 15 வேகத்தடைகள் அகற்றம்


பெருந்துறைக்கு முதல்-அமைச்சர் வருகை:  ரோட்டில் இருந்த 15 வேகத்தடைகள் அகற்றம்
x

பெருந்துறைக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி ரோட்டில் இருந்த 15 வேகத்தடைகள் அகற்றப்பட்டது.

ஈரோடு

பெருந்துறை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக அவர், சீனாபுரத்தை அடுத்துள்ள சம்பளக்காட்டுபுதூரில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு- அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை பார்வையிடுகிறார். இதற்காக பெருந்துறை நால்ரோடு சந்திப்பில் இருந்து சம்பளக்காட்டுபுதூர் வரையில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த 15 வேகத்தடைகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன. மேலும் ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.


Next Story