முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை

திருப்பூர்

திருப்பூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருப்பூர் வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். முதல்-அமைச்சர் வருகையையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

முதல்-அமைச்சர் திருப்பூர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வருகிறார். பல்லடம் வடுகபாளையத்தில் தி.மு.க. திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்டத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் பல்லடம் ரோடு வழியாக திருப்பூர் வரும் முதல்-அமைச்சருக்கு தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டை, திருப்பூர் மாநகராட்சி முன்பு, பெரியார்-அண்ணா சிலை முன்பு, புஷ்பா ரவுண்டானா முன்பு, குமார் நகர் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு குமார் நகரில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத்தில் முதல்-அமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.

1,000 போலீசார் பாதுகாப்பு

நாளை (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு அங்கிருந்து காரில் திருமுருகன்பூண்டிக்கு செல்கிறார். வழியில் 60 அடி ரோடு முன்பு, எஸ்.ஏ.பி.தியேட்டர் முன்பு, பெரியார்காலனி முன்பு, அனுப்பர்பாளையம் முன்பு, பெருமாநல்லூர் நால்ரோடு ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் காலை 10 மணிக்கு பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். மதியம் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். சேலம் மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முதல்-அமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

----


Next Story