விக்கிரவாண்டி அருகே சோகம்சூடான குழம்பு கொட்டி குழந்தை சாவு
விக்கிரவாண்டி அருகே சூடான குழம்பு கொட்டி குழந்தை உயிாிழந்தான்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள சாமியாடிகுச்சிபாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா (30). இவர்களது மகன் கிஷாந்த்(வயது 2½). சம்பவத்தன்று, புனிதா வீட்டில் சமையல் செய்தார். அப்போது ஒரு பாத்திரத்தில் குழம்பு வைத்து கீழே இறக்கி வைத்திருந்தார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த கிஷாந்த், எதிர்பாரதவிதமாக குழம்பு பாத்திரத்தின் மீது விழுந்துவிட்டான். இதில், சூடான குழம்பு அவனது உடலில் கொட்டியதில் அவன் படுகாயமடைந்தான். வலியால் துடிதுடித்த அவனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவன் இறந்தான். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.