நாய் கடித்து குழந்தை காயம்


நாய் கடித்து குழந்தை காயம்
x

செஞ்சி அருகே நாய் கடித்ததில் குழந்தை காயம் அடைந்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே பள்ளியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் தோனி (வயது 3). இவன் நேற்று வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று திடீரென குழந்தையை கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story