குழந்தை ஏசு மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா


குழந்தை ஏசு மெட்ரிக்குலேசன் பள்ளி  ஆண்டு விழா
x

குழந்தை ஏசு மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

திருச்சி

புள்ளம்பாடியில் உள்ள குழந்தை ஏசு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 31-வது ஆண்டுவிழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளிதாளாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கரோலின் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார முதன்மைகுரு மற்றும் விளாகம் புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை பெஞ்சமின், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் டாக்டர்.ரெல்டன், தனியார் பயிற்சி நிறுவனர் ஜான்லூயிஸ், கும்பகோணம் அகடாமி நிறுவனர் சார்லஸ் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினர். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் பேச்சுபோட்டி, நாடகம், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக பள்ளி ஆசிரியை ஜமிலாபீபி வரவேற்று பேசினார்.

முடிவில் பட்டதாரி ஆசிரியை ஜெயராகினி நன்றி கூறினார்.


Next Story