வீட்டில் தூங்கிய 1½ வயது குழந்தை கடத்தல்


வீட்டில் தூங்கிய 1½ வயது குழந்தை கடத்தல்
x

பழவூர் அருகே வீட்டில் தூங்கிய 1½ வயது ஆண் குழந்தையை மர்மநபர் கடத்தி சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே வீட்டில் தூங்கிய 1½ வயது ஆண் குழந்தையை மர்மநபர் கடத்தி சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆண் குழந்தை

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களது குழந்தை மாதேஸ்வரன் (1½ வயது).

இந்த நிலையில் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் பழவூர் அருகே சிவசக்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

கடத்தல்

நேற்று முன்தினம் இரவு வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் தூங்கிக் ெகாண்டிருந்தனர்.

அப்போது மர்மநபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி கடத்தி சென்று விட்டார். பின்னர் விழித்தெழுந்த ராஜேஸ்வரி, குழந்தை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடினர். ஆனாலும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்ைல.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து ராஜேஸ்வரி பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story