குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. புதிய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலத்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது குழந்தைகளை பாதுகாப்போம் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம், குழந்தைநேய சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம், பாதுகாப்போம் பாதுகாப்போம் குழந்தை உரிமையை பாதுகாப்போம், என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதேபோல குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் மெர்சி ரம்யா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story