சிறுமிக்கு குழந்தை திருமணம்


சிறுமிக்கு குழந்தை திருமணம்
x
தினத்தந்தி 17 May 2023 10:16 PM IST (Updated: 18 May 2023 12:51 PM IST)
t-max-icont-min-icon

அரூரில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி

அரூர்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 25) தொழிலாளி. இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி சைல்டு லைன் உறுப்பினர் ஆனந்தி, மகளிர் ஊர் நல அலுவலர் மலர்கொடி ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை திருமணம் செய்து கொண்ட ரவி, இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய பெற்றோர் முருகன் (50), மூக்கம்மாள் (45), சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த சிறுமி மீட்கப்பட்டு தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story