ரோசல்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு கலை நிகழ்ச்சி


ரோசல்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு கலை நிகழ்ச்சி
x

ரோசல்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பரவலாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ரோசல்பட்டி பஞ்சாயத்தில் ஜக்கம்மாள்புரத்தில் கலை குழுவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் மூலம் குழந்தை திருமண தடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பு சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் டாக்டர் தமிழரசி ஜெயமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story