குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கோவில்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைககளை கண்டறிந்து மீண்டும் கல்வியைத் தொடரச் செய்தல் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா பேசினார்.
குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி விளக்கி கூறினார். வட்டார தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி, கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சமூக நலத்துறை ஊர்நல அலுவலர், தொழிலாளர் நலத்துறை பணியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவன பிரதிநிதிகள், வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சுப்பிரமணியன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.