சங்கராபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்


சங்கராபுரத்தில்    குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:49+05:30)

சங்கராபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு, குழந்தைகள் சார்ந்த பிரச்சி னையை கண்காணித்தல், குழந்தைகள் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 3 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு குழு கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்து வியாபாரி சங்க நிர்வாகிகள், பொது சேவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story