குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நல பாதுகாப்பு குழு களப்பணியாளர் கவியரசு வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மறுவாழ்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளி கட்டிடங்கள் உறுதி தன்மை குறித்து அவ்வப்போது அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளுதல்,

குழந்தைகளுக்கான அவசர இலவச எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகள் எவரேனும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால் மருத்துவ அலுவலர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புகழூர் துணை தாசில்தார் கணேஷ், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story