குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

நாகை நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர் பகுதிக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் சுந்தரீஸ்வரிகணேசன், சத்தியவாணிகணேசன் உள்பட 3 பேர் நகர குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story






