திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் முருகன் கலந்து கொண்டு குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்குதல், பெண் சிசுக்கொலை, ஆண்-பெண் அனைவருக்கும் சமமான கல்வி, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, சமுதாய ஒருங்கிணைப்பாளர் சன்மாபேகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, நேரு யுவகேந்திரா பிரதிநிதி அதியமான்நெடுமான், பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சலீமாதாஜுதீன், பாபு, விருத்தாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story