குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
காவேரிப்பாக்கத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைககள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முஹம்மத் சையுப்தீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தவறான தொடுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஓச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஜெயகாந்தன், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, காவல், வருவாய் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story