குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் கோகிலாராணி நாராயணன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு மாவட்டப் பணியாளர் மகாலெட்சுமி குழந்தைகளுக்கான பிரச்சினை, கல்வியைக் கைவிடுதல், இளம்பருவத்தின் போக்குகள், முதலியன ஆராயப்பட்டு 1098-க்கு தகவல் அளிக்க கேட்டுக் கொண்டார். மேலும் குழந்தை தத்தெடுப்பு முறை குறித்தும் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல் துறையினர், பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story