14 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


14 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x

சிவகங்கை மாவட்டத்தில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், தொழிலாளர் நல அலுவலர் ராஜ்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், சரவணன், மதியழகன், கீதா கார்ததிகேயன் மற்றும் சீமான் ராம்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் கூறியதாவது:-

தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றவும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்யவும், அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை தொழிலாளர் துறையின் மூலம் மேற் கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

நடவடிக்கை

இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவினர் தொடர் களஆய்வு மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்களை மீட்டு கல்வி கற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் . அவர்களை பணியில் அமர்த்திய உரிமை யாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர் மணிவண்ணன் ,நகரசபை தலைவர் துரைஆனந்த் ஆகியோர் பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினார்கள்.


Next Story