குழந்தை இல்லாத ஏக்கம் - விரக்தியில் விபரீத முடிவு எடுத்த தம்பதியினர்
திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை,
நெல்லையில் திருமணம் நடைபெற்று 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கேபிள் டிவி ஆபரேட்டரான இவருக்கு ராதிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் ஏற்பட்ட தகராறில் இருவரும் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு முன்பு உறவினர் ஒருவருக்கு தற்கொலை தொடர்பாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story