பாலாற்றில் ஆனந்த குளியல் போட்ட சிறுவர்கள்
தண்ணீர் வரத்து அதிகமானதால் பாலாற்றில் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.
வேலூர்
வேலூர் பாலாற்றில் வெள்ளம் குறைந்தாலும், முற்றிலுமாக வறண்டு போகாமல் குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அவ்வப்போது மழை பெய்ததால் பாலாற்றில் தண்ணீர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக, வேலூர் பாலாற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தண்டலம் கிருஷ்ணாபுரம் பகுதி, சேனூர், கழிஞ்சூர் மற்றும் சேண்பாக்கம் பகுதி பொதுமக்களும், சிறுவர்களும் பாலாற்றில் உற்சாக குளியல் போடுகின்றனர்.
பெரியவர்கள் துணிகளை துவைக்கவும் ஆற்றுக்கு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சிறுவர்கள் பாலாற்றில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story