கொண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது


கொண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:12 AM IST (Updated: 10 Jun 2023 2:43 PM IST)
t-max-icont-min-icon

மாந்தாங்கல் கிராமத்தில் கொண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொண்டியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் வைத்து விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் கலவை சச்சிதான சாமிகள் தலைமையில் கோவில் விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கொண்டியம்மன் புஷ்ப அலங்காரத்தில் செண்டை மேளத்துடன் கிராம வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபி, மாந்தாங்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்பன் சேதுராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story