குழந்தைகள் குறைதீர்வு முகாம்


குழந்தைகள் குறைதீர்வு முகாம்
x

கே.வி.குப்பத்தில் குழந்தைகள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

வேலூர்

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் குறைதீர்வு முகாம் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர்கள் குடியாத்தம் வெங்கட்ராமன், வேலூர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதமன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ர.மைதிலி, லத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் மோகன், செயலாளர் விஸ்வநாதன் மற்றும் வடுகந்தாங்கல் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரத்வாஜ்தலால் லத்தேரி, சென்னங்குப்பம், சேத்துவண்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 400 பெண் குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடி, குறைகளை கேட்டார்.

அப்போது அந்த பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித்தரம், கல்விச் சூழல் போன்றவற்றை ஆய்வு செய்தார். சென்னங்குப்பத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சி, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், கல்வி உரிமை, பாலியல் குற்றம் தடுப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, தவறான வழி செல்வதைத் தடுத்தல், போதை தடுப்பு, போக்சோ போன்றவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


Next Story