குழந்தைகள் வாசிப்பு முகாம்


குழந்தைகள் வாசிப்பு முகாம்
x

சோழவந்தான், போடிநாயக்கன்பட்டியில் குழந்தைகள் வாசிப்பு முகாம் நடந்தது.

மதுரை

வாடிப்பட்டி,

போடிநாயக்கன்பட்டியில் பள்ளி கல்வி இயக்கம் சார்பாக உலக புத்தக தின விழாவையொட்டி குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக வாசிப்பு முகாம் மந்தை திடலில் நடந்தது. இந்த முகாமில் வட்ட வடிவில் அமர்ந்து 30 குழந்தைகள் கதைகளை வாசித்து, பாடல்கள் படித்தனர். இந்த முகாமில் வாசிப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது.இதன் ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வீரலேகா, பிரியதர்ஷினி, அங்காள ஈஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர். சோழவந்தான் கீழப்பச்சேரி பகுதியில் 15 குழந்தைகள் சுற்றி அமர்ந்து கதைகளை வாசித்தனர். ஒவ்வொரு குழந்தையும் தான் வாசித்த ஒரு கதையை அவர்களது சொந்த மொழியில் கூறியது மிக அருமையாக இருந்தது. இந்த நிகழ்வை சோழவந்தான் கீழப்பச்சேரி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பவித்ரா, மதுரை மண்டல பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான ராணிகுணசீலி ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story