குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
x

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், அரசு சாரா அமைப்புகள், வர்த்தக நிறுவனங் களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை வரை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வா ளர், சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், மனிதவள ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story