திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை


திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை
x

திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, வெள்ளப்பாறைப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி, மாவிலிப்பட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் பலர் மிளகாய் நாற்று நட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிளகாய் செடி நட்டு ஒரு மாதத்திலேயே செடியின் இலை சுருங்கிவிடுகிறது. ஒரு மிளகாய் செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவி அனைத்து செடிகளுமாக வைரஸ் நோய் தாக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஏக்கரில் பச்சைமிளகாய் விவசாயம் பாதிக்கபட்டுள்ளது. இதனால் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுதொடர்பாக தென்பழஞ்சியை சேர்ந்த விவசாயி முஷீபுர் ரகுமான், மாவிலிப்பட்டி முருகன் ஆகியோர் கூறியதாவது:- கடந்த ஒரு மாதத்திறகு முன்பு தேனி மற்றும் ஓட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதியில் இருந்து மிளகாய் நாற்று வாங்கி தங்களது தோட்டத்தில் நட்டு தண்ணீர் விட்டு விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மிளகாய் செடியில் வைரஸ் நோய் தாக்கி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை அதிகாரிக்கு விவசாயி முஷீபுர்ரகுமான் உரிய நிலையை தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலையில் தோட்டகலை துறை உதவி இயக்குனர் பிரபா, அலுவலர் சுருளிராஜன் ஆகியோர் தென்பழஞ்சியில் உள்ள தோட்டத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.


Next Story