கொல்லங்கோடு அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 4½ பவுன் சங்கிலி பறிப்பு; மர்ம ஆசாமி கைவரிசை


கொல்லங்கோடு அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 4½ பவுன் சங்கிலி பறிப்பு; மர்ம ஆசாமி கைவரிசை
x

கொல்லங்கோடு அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய்பொடி தூவி 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

ெகால்லங்கோடு அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய்பொடி தூவி 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோழிகளுக்கு தீவனம் கொடுக்க சென்றவர்

கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி இடகண்டம்விளையை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி சசிகலா (வயது50). இவர் நேற்று மாலையில் தனது வீட்டின் பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு முகத்தை கருப்பு துணியால் மூடியபடி ஒரு நபர் மறைந்திருந்தார்.

அந்த நபர் திடீரென பாய்ந்து சசிகலா முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். இதில் வலி தாங்க முடியாமல் சசிகலா அலறினார்.

நகை பறிப்பு

அப்போது அந்த நபர் சசிகலாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையனை அந்த பகுதியில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 4½ பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story