பிடாரி காளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம்
வரகூர் பிடாரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நடந்த மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாணாபுரம்
வரகூர் பிடாரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நடந்த மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று மிளகாய் யாகம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த மாதரம் அமாவாசையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு பால், தயிர், வெண்ணெய், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள செய்யப்பட்டு பூைஜகள் நடந்தன.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிறகு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிளகாய் காணிக்கை வழங்கினர். இதனையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.