புதுப்பட்டு காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
புதுப்பட்டு காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு மிளகாய் யாகம் நடைபெறும்.
அந்த வகையில், அமாவாசையான நேற்று முன்தினம், மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்துக்கு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் இரவு 10 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story