சின்னையன் கோவில் திருவிழா


சின்னையன் கோவில் திருவிழா
x

சின்னையன் கோவில் திருவிழா நடந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் சமேத சின்னையன் மற்றும் புஷ்பகலாம்பாள் சமேத அய்யனார் கோவில்களின் திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை எடுத்து வந்தனர். பூக்களை கொண்டு பாப்பாத்தி அம்மன், சின்னையன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து விநாயகர், முருகன், சின்னையன், பாப்பாத்தி அம்மன் ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர். இதில் ஆங்காங்கே இருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாவிளக்கு போட்டும் வழிபட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரங்களுடன், தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story