சின்னமனூரில்வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
சின்னமனூரில் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி
உசிலம்பட்டி தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடி வருகின்றனர். அதன்படி இந்த பகுதி விவசாய பயிர்களை ஆய்வு செய்த அந்த மாணவிகள் பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய பயன்கள் மற்றும் மாடி தோட்டம் அமைத்து இயற்கை வேளாண்மையை உருவாக்குவது குறித்த கண்காட்சியை சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தினர். கண்காட்சியை விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். அப்போது மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story