தொடர்மழையால் சின்னசேலம் ஏரி நிரம்பியது


தொடர்மழையால்    சின்னசேலம் ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் சின்னசேலம் ஏரி நிரம்பியது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரி அமைந்துள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வானகொட்டாய் அணைக்கட்டு வழியாக தண்ணீர் வரும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த சில நாட்களாக ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வழிந்தோடி வருகிறது. இதையறிந்த சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், துணைத் தலைவர் ராகேஷ், ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணி மாறன், அனைத்து வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் அப்துல்ரஹீம், பாசன சங்க தலைவர் சுரேஷ், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட சின்னசேலம் நகர மக்கள் ஒன்று கூடி மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த ஏரி நிரம்பியதால் சின்னசேலம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story