சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது


சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது
x

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்துவற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள வகுப்பறைகளில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் அந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டே நடத்தப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார். அதன்படி நேற்று முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதில் ஆண்ட்ராய்டு செல்போன் வசதி உள்ள மாணவ-மாணவிகள் மட்டும் வகுப்பில் கலந்துகொண்டனர். ஆனால் செல்போன் வசதி இல்லாத பெரும்பாலான மாணவர்ககள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்தனர். எனவே தங்களுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கோரிக்கை வைத்தனர்.


Next Story