சின்னவதம்பச்சேரி நெல்லுக்குப்பம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சின்னவதம்பச்சேரி நெல்லுக்குப்பம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னவதம்பச்சேரி நெல்லுக்குப்பம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோயம்புத்தூர்

சூலூர் தாலுகா சின்னவதம்பச்சேரியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சமேத நெல்லுக்குப்பம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமம், 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோமாதா பூஜை, அன்னபூரணி பூஜை, முளைப்பாலிகை ஊர்வலம், இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. 27-ந் தேதி காலை 6 மணிக்கு யாகசாலை பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, சிவசூரிய பூஜை, பஞ்சகாவ்ய பூஜை, 10.30 மணிக்கு முதல் கால ஹோமம், மதியம் 12.05 மணிக்கு விமான கலசம் ஸ்தாபித்தல், மாலை 4.30 மணிக்கு 2-ம் கால ஹோமம், 7 மணிக்கு 3-ம் கால ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் 5-ம் கால பூஜை, சதுர்வேதம், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, 6-ம் கால ஹோமம், மங்கள தீபாரதனையும், தொடர்ந்து யாகசாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் 9.30 மணி அளவில் ராஜகோபுரம், அம்மன் கோபுரம், பரிவார தெய்வ கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். மாலையில் அம்மன் திருக்கல்யாணமும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மண்டல பூஜை தொடங்குகிறது.


Next Story