சிமெண்டு தொழிற்சாலை முன்பு சித்தேரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


சிமெண்டு தொழிற்சாலை முன்பு சித்தேரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

தனியார் சிமெண்டு தொழிற்சாலை முன்பு சித்தேரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

தனியார் சிமெண்டு தொழிற்சாலை முன்பு சித்தேரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு சித்தேரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்ேகற்றோர், சிமெண்டு தொழிற்சாலையில் இருந்து அளவுக்கு அதிகமான கழிவுகள் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் சுவாச நோய்களுக்கு ஆளாகின்றனர். மூலப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் கொட்டப்படுவதால் நிலத்தடிநீர், மண் வளம் பாதிக்கப்படுகிறது. உள்ளூர் கிராம இளைஞர்களுக்கு தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு வழங்க ேவண்டும், பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்ைககள் மற்றும் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

1 More update

Next Story