சித்திரை திருவிழா தேரோட்டம்


சித்திரை திருவிழா தேரோட்டம்
x

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி மாலை 6 மணியளவில் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று தேரடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை அடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்த பிறகு தாரை, தப்பட்டை, சிவநாதம் ஒலிக்க தேரோட்டம் தொடங்கியது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டம் திண்டுக்கல் நகரின் 4 ரதவீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது.


Next Story