திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
x

திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் மாநகர மேயர் மகேஷ், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் சண்முகம், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது.

விழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், காலை, மாலைகளில் சாமிகள் வாகனத்தில் பவனி வருதல், இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 3-ந் தேதி சித்திரை தேரோட்டமும், 4-ந் தேதி சாமிக்கு ஆராட்டும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


Next Story