சித்ரா பவுர்ணமி விழா


சித்ரா பவுர்ணமி விழா
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:45 PM GMT)

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் 25-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.இதையொட்டி கொப்புடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவாலயா இசைப்பள்ளி மாணவர்களின் பக்தி இசை நிகழ்ச்சியும், சமுதாயம் சீரும் சிறப்பும் பெற துணை செய்வது அறிவியலா? ஆன்மீகமா? என்ற தலைப்பில் சரஸ்வதி ராமநாதன் தலைமையிலான குழுவினர் பங்கு பெற்ற சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதையொட்டி விஸ்வகர்மா சமூக அறக்கட்டளை தலைவர் சோலைமலை ஆச்சாரிக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருதை சங்க நிர்வாகிகள் வழங்கினர். விழாவில் கோவில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி, விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் தெய்வசிகாமணி, முத்துராமலிங்கம், ஞானசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், அப்பாவுராமசாமி, ராஜ்குமார், கருப்பையா, முத்துக்குமரன், வீரப்பன், முருகேசன், நாகராஜன், அய்யாதுரை, சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story