சித்திரை கனி விழா


சித்திரை கனி விழா
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவிலில் சித்திரை கனி விழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவிலில் சித்திரை கனி விழா நடைபெற்றது. முன்னதாக அருணகிரி சிவாச்சாரியார், சேவற்கொடியோன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடந்தது. அய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள் போன்ற 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாங்கனி, வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை மற்றும் உருளை கிழங்கு, கேரட், கத்திரிக்காய், வாழக்காய் போன்ற காய்கனி வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல் வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையெட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் பிரசன்னா குழுக்கள் தலைமையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல வகை காய் கனிகளை கொண்டு மாலையாக தொடுத்து அம்பாளுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story