நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு


நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு
x

நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவுபெற்றது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்சம், தங்க குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 19-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு கருடமண்டபத்திற்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7.30 மணிக்கு சென்றார்.

ஆளும் பல்லக்கில் வீதி உலா

வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து, இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story