சித்த வைத்தியர் வெட்டி படுகொலை
கோவை அருகே சித்த வைத்தியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே சித்த வைத்தியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்த வைத்தியர்
சேலம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது60). இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை வரதையங்கார்பாளை யம் பகுதியில் வசித்து வந்தார். இதையடுத்து அவர், கடந்த 4 ஆண்டுகளாக கீரணத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார்.
மேலும் அவர், அங்கு சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான செல்வமணி சக்கர நாற்காலியில் பயணம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை செல்வமணி தங்கி இருந்த தோட்டத்தின் அருகில் சிலர் பூப்பறிக்க சென்றனர். அப்போது அங்கு செல்வமணி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
காரணம் என்ன?
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொடுத்த தகவ லின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் தனியாக வசித்த செல்வமணி, மர்ம மனிதர்கள் தலை யின் பின்புறம் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கொலை நடந்ததா? அல்லது யாருக்காவது சித்த மருந்து கொடுத்த விவகாரத்தில் கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.