சோழீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் புகழ்பெற்ற சவுந்்தரநாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு விழா குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், கோவில் நிர்வாக கமிட்டியினர், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது குடமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்துவது, அதற்கான திருப்பணியில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் கோவில் ராஜகோபுரம் வர்ண வேலைகள், கருங்கற்கள் பதிக்கும் பணிகள், சிற்ப வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.






