சொக்கநாத சுவாமி கோவில் வருடாபிஷேக விழா


சொக்கநாத சுவாமி கோவில் வருடாபிஷேக விழா
x

சொக்கநாத சுவாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் 11-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கலசங்கள் ஓம் வடிவிலும், சங்குகள் சிவன் வடிவிலும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலசங்கள், சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி, அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story