ராமேசுவரம் கோவிலில் மகாதீபவிழா


ராமேசுவரம் கோவிலில் மகாதீபவிழா
x
தினத்தந்தி 7 Dec 2022 7:04 PM GMT (Updated: 8 Dec 2022 12:35 PM GMT)

திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தீப விளக்குகள்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவு கோவிலின் மூன்றாம் பிரகாரம் முழுவதும் ஏராளமான தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. அதுபோல் பிரகாரத்தின் மையப் பகுதியான சாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கு செல்லும் வாசல் பகுதியில் சிவன் வடிவிலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மேலும் திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து கிழக்கு வாசல் பகுதிக்கு எழுந்தருனினர். பின்னர் இரவு 7:40 மணிக்கு கிழக்கு வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் சிறப்பு பூஜை நடைபெற்று மகாதீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுந்து விட்டு எரிந்தது.

சொக்கப்பனை

கோவில் வாசல் முன்பு வைக்கப்பட்ட சொக்கப்பனை தீபத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். சொக்கப்பனை தீபம் முடிந்த பின்னர் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரதவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதேபோல் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலிலும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் வாசலில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story